அஜித்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் ! புகைப்பட்ம உள்ளே ?

0
1465
Raghava Lawrence

ராகவா லாரன்ஸ் நடிகர் மற்றும் நடன இயக்குனர். தொழில் முறையாக இவர் சினிமாவில் இருந்தாலும். தனது முழு நேர பணியாக சமூக சேவைகள் செய்வதில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

குறிப்பாக பல்வேறு சேவைகள் செய்து வரும் அவர், தொடர்ச்சியாக உடல் ஊனமூற்ற குழந்தைகளை எடுத்து தனது ஆசிரமத்தில் வைத்து அவர்களின் வாழ்க்கை மற்றும் படிப்பு செலவுகளை செய்து ஆதரவளித்து வருகிறார்.

இந்த வருட துவக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இறங்கி களத்தில் நின்று போராடினார். மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு உள்ளிட பொருட்களை வழங்கியும் உதவி செய்தார்.

பல குழந்தைகளுக்கு மருத்துவ செலவிற்காக பணவுதவி செய்து வரும் லாரன்ஸ். 20 வயதாகும் பெரம்பலூரைச் சேர்ந்த அஜித் என்ற மாற்றுதிறனாளியை இன்று பார்க்க சென்றுள்ளார். அஜித்திற்கு லாரன்சை மிகவும் பிடிக்குமாம், இதனைத் தெரிந்து கொண்ட லாரன்ஸ் அவரை பார்க்க சென்றுள்ளார். இந்த விசயத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.