ரகுவரன் மற்றும் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. புகைப்படம் உள்ளே..

0
274661
raguvaran
- Advertisement -

தமிழ்சினிமாவில் பல்வேறு நட்சத்திர தம்பதிகளின் வாரிசுகள் சினிமாவில் கலக்கிக்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில நட்சத்திர தம்பதிகளின் வாரிசுகள் யார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர தம்பதிகளான ரகுவரன் மற்றும் ரோகிணியின் மகன் யார் என்பதும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்தான். 80ஸ் காலகட்டம் தொடங்கி தூக்கி காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமானார் ரசகுவரன் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன், அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொரிந்து போக பின்னர் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமா,ர் கார்த்தி என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். 1975 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரோகினி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின்னர் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார் இவரது மரணத்திற்கு நடிகை ரோகிணி கூட வந்திருந்தார். மேலும், ரகுவரினின் மரணத்தின் போது தான் ரகுவரனின் மகன் யார் என்பதே பலருக்கும் தெரிய வந்தது.

Image result for raghuvaran son
Image result for raghuvaran son

ரகுவரனை ஹீரோவாகவும் வில்லனாகவும் தான் பலருக்கும் தெரியும். ஆனால், ரகுவரன் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதும் பலரும் அறிந்திராத ஒரு விஷயம். சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டு ரகுவரன் ஒரு இசையமைப்பாளராக வரவேண்டும் என்பதுதான் ஆசையாம். மேலும், ரகுவரன் லண்டனில்இசை கல்லூரியில் படித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரகுவரன் முப்பது பாடல்களை இதுவரை கம்போஸ் செய்திருக்கிறாராம். ரகுவரன் இசையமைத்த பாடல்களை ரகுவரனின் மனைவி ரோகினி அவரது மகன் ரிஷியும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரகுவரன் இசை பயணம் என்ற ஆல்பம் பெயரில் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement