நான் நெனச்சி இருந்தா ஹீரோ ஆகி இருக்க முடியும் – ஆனா, அந்த படத்துக்கு அப்புறம் நான் அத மாத்திகிட்டேன்.

0
664
raghuvaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகம் இதுவரை பார்த்திடாத மிக சிறந்த ஒரு வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் 1982ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார். மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பின் வந்த “யாரடி நீ மோஹினி” திரைப்படத்தில் தனுஷுடைய அப்பாவாக நடித்து தன்னுடைய அசாதரானமான நடிப்பினால் எல்லோரையும் மிரள செய்திருந்தார். பின்னர் 2008ஆம் ஆண்டு அதிக மது பழக்கத்தினால் காலமானார் அவரது இறப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாதது. இந்த நிலையில் தான் நடிகர் ரகுவரன் தன்னுடைய வாழ்கை பற்றியும், சினிமா பற்றியும் பேசிய அறிய வீடியோ பதிவு ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

நினைத்திருந்தால் ஹீரோ ஆகிருப்பேன் :

ரகுவரன் அந்த வீடியோவில் கூறிய சில விஷியங்கள் `அஞ்சலி என்ற ஒரு படம் வந்த போது எனக்கு அந்த படத்தில் ஒரு குழந்தயுடைய அப்பாவாக நடித்திருந்தேன். அந்த படத்திற்கு பிறகு அந்த அளவிற்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஹீரோவாகத்தன் இனி படங்களில் கதாநாயகனாக நடித்தால் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெற்றால் இப்படியே இரண்டு பாடல், சண்டை என்று முடிந்து விடுமோ என்று பயந்துதான் நான் மீண்டும் என்னுடைய பல நிலைக்கே சென்று விட்டேன். நினைத்திருந்தால் நான் கதநாயகனான ஆகி இருக்கலாம் ஆனால் அதில் எனக்கு சுவாரசியம் தெரியவில்லை இதுதான் கதாநாயகனாக நான் நடிக்காததற்கு உண்மையான காரணம் என்று கூறினார்.

திருப்பு முனை :

நான் தோற்றத்தை வைத்து மட்டுமே வில்லன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படத்தில் உறுதியான கதாநாயகன் என்றால் அவருக்கு ஈடுகொடுக்கும் வில்லனாக நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதோடு என்னுடைய தவறுகளை நான் அவ்வப்போதே சரி செய்து வந்து கொண்டிருந்தேன். ஆனால் திருப்புமுனை என்று சொன்னால் அது என்னுடைய திருமணம் தான். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னுடைய தொழிலை போலவே என்னுடைய திருமணத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தேன்.

-விளம்பரம்-
raghuvaran

தேசிய விருது கிடைக்கவில்லை :

நான் சினிமாவில் வில்லன் என்று ஆனா பிறகு அதிக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் பல வில்லன் கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் போன்ற பல நடிகர்களுடன் நடித்தேன். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு மேலே பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியில் வருவது சாதாரண காரியமில்லை அதனால் மற்ற மொழிகளில் என்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.

தேசிய விருது என்பது எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அது எப்போது என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் விருது என்பது அவர்களாக பார்த்து கொடுப்பது மட்டும் விருது இல்லை, நமக்கு எல்லா மொழிகளிலும் இவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்று நினைக்கும் போது அதுதான் பெரிய விருதாக எனக்கு தோன்றுகிறது. எனவே அதற்காக தனியாக எந்த முயற்ச்சியும் எடுப்பதில்லை. எந்த விஷியம் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும், ஒரு விஷயம் எனக்கு சரியாக படவில்லை என்றாலே அதில் நான் காலே வைக்க மாட்டேன், அதனை பற்றி முழுவதுமாக தெரிந்த பிறகுதான் அந்த விஷியத்தை கையில் எடுப்பேன் என்று தன்னுடைய வாழ்க்கையில் நடத்த பல சுவாரசியமான விஷியங்கள் குறித்து ரகுவரன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement