போதைப் பொருள் பயன்படுத்தியதைக் கண்டறிய சோதனை – சிறு நீரில் பித்தலாட்டம் செய்துள்ள ஜெயம் ரவி பட நடிகை.

0
1258
- Advertisement -

கடந்த சில தினங்களாக கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

-விளம்பரம்-
ragini

கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கன்னட சீரியல் நடிகையான அனிகா என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்,போதை பொருட்களை கன்னட சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் கூட பயன்படுத்தியதாகவும் கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் போதை பொருள் பயன்படுத்தும் 15 நடிகர் நடிகைகளில் பெயரையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

- Advertisement -

மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த போதை பொருள் பயன்படுத்தும் விவகாரத்தில் கன்னட நடிகையான ராகினி திவேதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். கன்னட நடிகையான இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் வில்லன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், காவேரி பிரச்சனையின் போது தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sandalwood actor Ragini Dwivedi arrested by CCB police in drug case |  Deccan Herald

போதை பொருள் விவாகரத்தில் கைது செய்யப்பட்ட இவரிடம் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளரா என்பதை சோதனை செய்வதற்காக பெங்களூருவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதனையடுத்து, அவரிடம் மீண்டும் சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. மேலும் தலைமுடி சோதனை செய்யப்படவுள்ளது. 

-விளம்பரம்-
Advertisement