ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் – சைபர் கிரைமில் புகார்.

0
1056
rajarani2
- Advertisement -

சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதால் நடிகை சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் அல்லது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் அவ்வபோது சில வக்கிர புத்தி கொண்ட கிருமிகளால் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் சீரியல் நடிகை பிரவீணாவின் மார்பிங் செய்யபட்ட ஆபாசமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனால் இவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி 2 சீரியல். இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக சிவகாமி கதாபாத்திரத்தில் நடிகை பிரவீணா நடித்து வருகிறார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல்வேறு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை பிரவீணா உடனடியாக இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

பொதுவாகவே சமூகவலைத்தளங்களில் பெண்கள் பலரும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்களில் ஒன்று தான் இந்த ஆபாச புகைப்படம். இதனால் முகம் தெரியாதவர்களால் பல தொந்தரவு ஏற்படுகிறது. இந்த சில விஷகிருமிகளால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான் நடிகை பிரவீணா ஒரு மர்ம நபரால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், நடிகைகள் புகைப்படம் இப்படி மார்பிங் செய்யப்பட்டு வெளியிடுவது இயல்பான ஒன்றுதான். அது சில நாட்கள் மட்டும் பேசப்படும். அதற்கப்புறம் அதுவாகவே மாறிவிடும். ஆனால், நடிகை பிரவீணா சைபர் கிரைமில் புகார் அளிக்கும் அளவிற்கு பயங்கர சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதுகுறித்து நடிகை பிரவீணா கூறியிருப்பது, மர்ம நபர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரொம்ப நாட்களாகவே பின்தொடர்ந்து வந்து இருக்கிறார். தன் கணக்கில் உள்ள பாலோவர்களுக்கு தேவையில்லாத படங்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார். தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இதேபோல் முறைகேடான புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்து இருக்கிறார். தொடர்ந்து இந்த வேலை செய்து வந்த அந்த மர்ம நபரை நான் பல முறை எச்சரித்து இருக்கிறேன். ஆனால், தற்போது எல்லை மீறி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். இதனால் தான் நான் போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பெயரில் இயங்கும் போலி கணக்கை பின் தொடர வேண்டாம், எச்சரிக்கையாக இருக்குமாறும் ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சின்னத்திரை மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நடிகை பிரவீணா சைபர் கிரைம்மில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாகுமரி மற்றும் டெல்லியை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement