காதலில் இருப்பதை ஒத்துக்கொண்ட ரியா , அட இந்த விஜய் டிவி நடிகர் தான் அவரின் காதலரா ? விருது விழாவில் நடந்துள்ளதை பாருங்க.

0
627
riya
- Advertisement -

சினிமாவை போல சின்னத்திரையிலும் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சஞ்சீவ் – ஆல்யா, சித்து – ஷ்ரேயா, மதன் – ரேஷ்மா இப்படி ரீல் ஜோடிகளின் இருந்து ரியல் ஜோடிகளாக ஆனா சீரியல் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் மற்ற தொலைக்காட்சியை விட விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் சீரியல் பிரபலங்களில் தான் ரியல் ஜோடிகள் அதிகம். இப்படி ஒரு நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் அடுத்த ஜோடி ரெடியாகி வருவதாக தற்போது புகைந்து இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-101.png

அட, அது வேறு யாரும் இல்லை ராஜா ராணி 2 வில் புதிய சந்தியாவாக நடித்து வரும் ரியா தான். விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் இரண்டாம் பாகம் வந்து இருக்கிறது. அந்த வகையில் ராஜா ராணி தொடரும் ஒன்று. இந்த தொடரின் முதல் சீசனில் லீட் ரோலில் நடித்த சஞ்சீவ் – ஆல்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

விலகிய ஆல்யா :

இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டுவந்தார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா மானஸா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்ததால் அவர் மீண்டும் சீரியலில் இருந்து விலகினார்.

புதிய சந்தியா ரியா :

அவருக்கு பதிலாக புதிய சந்தியாவாக நடிக்க வந்தவர் தான் ரியா. முதல் குழந்தை பிறந்து சில மாதத்திலேயே ஆள்யா மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் நடிக்க வந்துவிட்டார். எனவே, இரண்டாம் முறையும் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் தான் இனி நிரந்திர சந்தியா என்று ரியா அறிவித்து இருந்தார். மேலும், ஆல்யாவும் இனி சந்தியாவாக ரியா தான் தொடருவார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

விஷாலுடனான உறவு :

சரி, ரியா லவ் கிசுகிசுக்கு வருவோம். சென்னையை சேர்ந்த மாடல். இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாக இருக்கிறார். மேலும், பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் தான் ரியா. அவருடைய சிபாரிசில் தான் ரியாவிற்கு ராஜா ராணி 2வில் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசு கிளம்பி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-315-578x1024.jpg

தான் காதலில் இருப்பதை உறுதி செய்த ரியா :

அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விழாவில் விஷால் விருது வாங்கிய போது கேமெரா அடிக்கடி ரியாவை தான் காட்டியது. அப்போது அருகில் இருந்த அர்ச்சனா கூட ரியாவின் ரியாக்ஷனை தான் பார்த்துக்கொண்டு இருந்தார். இதனால் ரியா மற்றும் விஷால் காதலிக்கின்றனரா என்று கிசுகிசு கிளம்பிவிட்டது. அதே போல ரசிகர் ஒருவர் ‘இவ்ளோ அழகா இருக்கீங்க உங்கள எப்படி உஷார் பண்றது டிப்ஸ் கொடுங்க’ என்று கேட்டு இருந்தார். அதற்க்கு ரியா ‘பிரதர் நான் ஏற்கனவே கமிட்டட் பிரதர்’ என்று கூறி இருந்தார். ஒரு வேலை அது விஷால் தானோ ?

Advertisement