பொதுவாக திரைப்படங்கள் தான் பார்ட் 1 பார்ட் 2 என்று அடுத்தடுத்து பாகங்கள் வரும் ஆனால் சீரியல்களில் பார்ட் 1 பார்ட் 2 என்று அறிமுகம் செய்து வைத்தது விஜய் டிவி என்று தான் சொல்ல வேண்டும் கனா காணும் காலங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் ராஜா ராணி மௌன ராகம் பாரதி கண்ணம்மா இப்படி பல்வேறு தொடர்கள் பார்ட் 1 பார்ட் 2 என்று ஒளிபரப்பாகி இருந்தது. பாரதி கண்ணம்மா சிரியலின் முதல் பாகம் பாரதி கண்ணம்மாவிற்கு தாலி காட்டுவதுடன் முடிந்து விடும் என்றிருந்த நிலையில் சுபம் என்று வருவதற்கு மாறாக தொடரும் என்று வந்தது.
ஒரு வழியாக முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 என்ற புதிய கதை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த கதையில் பாரதி வசதியான வீட்டு பையன் ஆனால் குடிகாரன், கண்ணம்மாவோ ஜெயிலில் இருந்து வருகிறார். இவர்களை மையமாக வைத்துதான் சீரியல் இனி தொடர போகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபபராகும் ராஜா ராணி சீரியலும் தற்போது இரண்டாம் பாகமானது தொடங்கி வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி இரண்டு சீரியல்களை இயக்கி வருபவர் தான் பிரபல இயக்குனர் பிரவீன் பென்னெட் .இவர் ராஜா ராணி சீரியலை மட்டும் இயக்காமல், பாரதி கண்ணம்மா, பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, சரவணன் மீனாட்சி என பல சீரியல்கள் இயக்கி இருக்கிறார். அதோடு இவர் இயக்கும் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுப்பதினால் இவருடைய சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்று போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் பல பேர் அடுத்தடுத்து சீரியலுக்கு வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.ஆனாலும் கூட இவர் இயக்கம் பல சீரியல்கள் பல விதமான சர்ச்சையில் சிக்கியும் தான் வருகின்றன. குறிப்பாக தற்போது ராஜா ராணி தொடரில் சந்தியா Ips அதிகாரியாக ஆன பின்னரும் இன்னமும் மாமயிருக்கு பயந்து வீட்டு வேலை செய்யும் நபராகவே தான் இருந்து வருகிறார்.
இதனால் இந்த சீரியல் ஒரு பிற்போக்கு தனமான சீரியலாக பெயரெடுத்த வருகிறது. இந்த தொடரில் ஆரம்பத்தில் ஆல்யா மானஸா தான் நடித்து வந்தார். அவர் குழந்தை பிறந்த காரணத்தினால் விலகியதால் அவருக்கு பதில் ரியா என்பவர் நடித்து வந்தார். தற்போது அவரும் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் தனக்கு தெரிவிக்காமலேயே தன்னை மாற்றி விட்டதாக கூறி இருக்கிறார்.
ரியா விலகியது இந்த தொடருக்கு ஒரு பலவீனமாக ஆகி இருக்கும் நிலையில் தற்போது பிரவீனும் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார. ரியா விலகியதற்கான காரணம் குறித்து அவரிடன் கேட்ட போது “சமீபமாக நான் அந்த சீரியலை இயக்கவில்லை. அதனால ஹீரோயின் மாறுன விஷயத்துல என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியல என்று கூறி இருக்கிறார். பிரவீன் விலகி இருப்பதால் தற்போது இந்த சீரியலை வேறு ஒரு இயக்குனர் தான் இனி இயக்கப் போகிறார்.