ராஜா ராணி செம்பாவா இது.! யாரும் இப்படி பாத்து இருக்கமாட்டீங்க.! நீங்களே பாருங்க.! புகைப்படம்

0
1078
alya-manasa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவர் எதை பதிவிட்டாலும் அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி விடுகிறது, சமீபத்தில் இவர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘வித் மை பேபி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் இருவரையும் இணைத்து பேச, அந்த பதிவை உடனே தூக்கி விட்டார்.

இந்நிலையில் நடிகை மானசா, புதிதாக பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தனது பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள மனசா, அதில் மிகவும் அழகா இரட்டை ஜடை போட்டுக் கொண்டு பள்ளி சீருடையில் இருக்கிறார். மானசாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோ குயூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.