ரோட்ல கார நிறுத்தனது ஒரு குத்தமா ? ராஜா ராணி சீரியல் பிரபலத்துக்கு ஏற்பட்ட சோகம் – போலீசில் புகார்.

0
458
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் நடிகர் திடீரென்று போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :

இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியலில் வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார். இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் அர்ச்சனாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அவர் ஆண் வாரிசு வேண்டும் என்று குழந்தையை மாற்றி கொள்கிறார். இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. எல்லோருமே அர்ச்சனாவிற்கு ஆண் குழந்தை தான் பிறந்திருக்கிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

சீரியலின் கதை:

இன்னொரு பக்கம், பல போராட்டங்களுக்கு பிறகு சந்தியா தான் ஆசைப்பட்ட மாதிரி போலீஸ் ட்ரைனிங் சென்றிருக்கிறார். அங்கு அவரால் ஒழுங்காக எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை. சந்தியா ரொம்ப பலவீனமாக இருப்பதால் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால் டீமில் இருப்பவர்கள் சந்தியாவை திட்டுகிறார்கள். பின் சந்தியா தான் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று நினைத்து டெஸ்ட் செய்து பார்க்கிறார். அதில் தான் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. இந்த தகவல் உயர் அதிகாரி அறிந்து கொண்டு சந்தியாவின் குடும்பத்திற்கு போன் செய்து சொல்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

நடிகர் லோகேஷ் குறித்த தகவல்:

ஆனால், சரவணன் சந்தியா உடைய கனவு நிறைவேறாமல் போகிறது என்ற வருத்தத்தில் இருக்கிறார். சந்தியா தன்னுடைய கனவில் ஜெயிப்பாரா? போலீஸ் பயிற்சி தொடருவாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நடிகர் லோகேஷ் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அதாவது, தற்போது போலீஸ் பயிற்சி எபிசோடுகள் சென்று கொண்டிருப்பதால் பல கதாபாத்திரங்கள் சீரியலில் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

நடிகர் லோகேஷ் போலீசில் புகார்:

அந்த வகையில் போலீஸ் பயிற்சிக்காக வந்திருப்பவர் தான் நடிகர் லோகேஷ். இவர் ஏற்கனவே சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளி திரையிலும் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் லோகேஷ் உடன் காரில் Aamod என்பவர் பயணித்திருக்கிறார். அவர் லோகேஷ் காரின் பின்னால் உடைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை திருடி இருக்கிறார். இதனை கண்டுபிடித்து தருமாறு தான் லோகேஷ் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Advertisement