இந்த மாதம் ஆல்யாவிற்கு பிரசவம் – இவர் தான் தற்காலிக சந்தியாவா ? வெளியான புகைப்படம் இதோ.

0
720
Alya
- Advertisement -

ராஜா ராணி 2வில் இருந்து விலக போறீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு ஆல்யா மானஸா பதில் அளித்துள்ளார். சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா ;

இதனிடையே இவர்கள் இருவருமே எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அடிக்கடி தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆல்யா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சோசியல் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆல்யாவும் ஆம் என்று பதிலளித்திருந்தார்.

சந்தியா குறித்து ஆல்யா :

இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தற்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார் ஆல்யா. அதே போல ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகப்போபவதாக தொடர்ந்து சமூக வலைதளத்தில் வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஸா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is r11rf-578x1024.jpg

இந்த மாதம் ஆல்யாவிற்கு பிரசவம் :

அப்போது ரசிகர் ஒருவர், சீரியல் விட்டு நீங்க போறீங்களா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஆல்யா ‘ராஜா ராணி 2வில் இருந்து விலக எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா மட்டும் தான்’ என்று பதில் அளித்துள்ளர். இதன் மூலம் ராஜா ராணி 2 வில் இருந்து ஆல்யா எப்போதும் விலக மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களின் யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

This image has an empty alt attribute; its file name is image-153.png

சந்தியா இனி இல்லையா :

கர்ப்பமாக இருக்கும் போதும் தொடர்ந்து நடித்து வந்தார். இப்படி ஒரு ஆல்யா மானஸாவிற்கு இந்த மாதம் குழந்தை பெற இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஆல்யாவிற்கு பதிலாக வேறு ஒருவர் தற்கமாக நடிக்க வந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், தற்போது கதைப்படி சந்தியா கோச்சிங் கிளாஸ் செல்வது போல காண்பிக்கபடுவதாகவும் அதனால் ஒரு சில மாதல் சந்தியா கதாபாத்திரம் சீரியலில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Advertisement