எல்லாம் மேக்கப்பா – வீட்டில் துளியும் மேக்கப் இல்லாமல் ஆல்யா மானஸா எப்படி இருக்கார் பாருங்க.

0
4024
Alya
- Advertisement -

தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளின் புகழுக்கு நிகராக சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சமீப காலமாக மக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும்; செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க :ந்தாள் உங்களையே மேடையில் வைத்து அசிங்கப்படுத்தியவர் தானே – இளையராஜாவிற்கு வாழ்த்து சொன்ன பார்த்திபனை கேட்ட நபர். பார்த்திபன் பதிலடி.

- Advertisement -

இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், தங்களது மகளுக்கு அய்லா சையத் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதாவது ஆல்யா என்ற பெயரில் இருந்தும் சஞ்சீவ்வின் உண்மையான பெயர் “syed Azharuddin Buhari”  என்ற பெயரில் இருந்தும் எடுத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

குழந்தை பிறந்த பின்னர் தற்போது ஆல்யா மானஸா, ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அந்த தொடர் நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் மேக்கப் எதுவும் போடாமல் வித்யாசமாக தெரிகிறார் ஆல்யா.

-விளம்பரம்-
Advertisement