லாஸ்லியாவின் தந்தையால் வெளியேறினாரா கவின்.! முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சொன்ன தகவல்.!

0
12622
Kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பான இரண்டு ப்ரோமக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 79 நாட்களை நிறைவு செய்துள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் கேள்வி கேட்டு சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் அனுப்பியது, பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, கொஞ்சம் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது .

-விளம்பரம்-

இன்று வெளியான ப்ரோமோவில் freeze டாஸ்க்கின் போதுலாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஆனால், 10 வருடம் கழித்து மகளை சந்தித்த சந்தோசம் லாஸ்லியாவின் தந்தை முகத்தில் இல்லை.

இதையும் பாருங்க : மகளீர் மட்டும் நாகேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்.! வெளியான அறிய புகைப்படம்.!

- Advertisement -

அதே போல சற்று முன்னர் வெளியான மூன்றாவது ப்ரோமோவில், லாஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக சாடியுள்ளார் லாஸ்லியாவின் தந்தை. மேலும், அந்த ப்ரோமோவில் சேரனை தவிர லாஸ்லியாவின் தந்தையை யாரும் நெருங்ககூடவில்லை. இதனால் கவின் மற்றும் லாஸ்லியாவின் உறவிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட்டது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

இந்த நிலையில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே தன்னால் லாஸ்லியாவிற்கு அவரது அப்பாவிடம் எந்த பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதால் கவின் வெளியேறினார் என்று செய்திகள் பரவி வருகிறது. எப்போதும் கவின் லாஸ்லியா மற்றும் அவரது நண்பர்கள் ஜெயிக்கவேண்டும் என்று கூறி வந்ததும் நாம் பலரும் அறிவோம்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது அவர் வெளியேறினார் என்ற செய்தி பொய் என்றும் அவருக்கு வாக்கு விழ கூடாது என்று சிலர் இபப்டி பொய்யான செய்திகளை பரப்பிவிடுகிறார்கள் என்றும் கவின் ஆர்மி ட்விட்டரில் கூறியுள்ளனர். மேலும், பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்தே கவின் இருந்து வரும் Fab5 அணிக்கு சாதகமா பேசி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும், சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலும் கவின் வெளியேறினார் என்ற செய்தி பொய்யானது என்று கமன்ட் செய்துள்ளார். எனவே, இது கவினின் வாக்கை குறைக்க ஏற்படுத்திய சாதியாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement