விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. இவருடைய உண்மையான பெயரை விட சீரியல் பெயரான ‘செண்பா’தான் பேமஸ். இவருக்கு என ரசிகர் பட்டாளம் உள்ளது.
I am really sorry dears ?? pic.twitter.com/5vNYPZAzdA
— Alya Manasa (@AlyaManasa) January 11, 2018
இவர் சீரியலை தவிர டான்ஸ், டப்ஸ்மாஷ் என கலக்குவார் செண்பா. ஆனால் சீரியலை தவிர இருவருக்கு பல கமிட்மென்ட்கள் இருக்கிறது . இவருக்கு இளம் ரசிகர்வட்டம் அதிகம் என்பதால் பல கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு இவருக்கு அழைப்பு வருகிறது.
அதுபோல நேற்று ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார் செண்பா. இதனால் இவரது ரசிகர்கள் இவரை பார்க்க மொத்தமாக கூடிவிட்டனர். மேலும், செண்பாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்கவும் வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் உடனே தனது அறைக்கு சென்றுவிட்டார் செண்பா.
மேலும் தனது அறைக்கு சென்ற உடனே, ஒரு வீடியோ மூலம் மன்னிப்பும் கேட்டார். என்னை மன்னித்துவிடுங்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை, என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்து மன்னிப்பு கேட்டார் செண்பா.