குழந்தை பிறந்த பின்னர் இப்படி தான் எடையை குறைத்தேன் – ஆல்யா மானஸா வெளியிட்ட வேற லெவல் வீடியோ.

0
3530
alya
- Advertisement -

குழந்தை பிறந்ததற்கு பின்னர் ஆல்யா மானஸா எப்படி உடல் எடையை குறைத்தார் என்று ஆல்யா மானஸா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் பலரும் வியப்படைந்து உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த விழாவில் நண்பர்களும், உறவினர்களும், திரைஉலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடினார்கள். சமீபத்தில் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆனால், ஆலியா மானசா ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வந்தார்.

View this post on Instagram

😇😇😇😇😇😇😇😇😇😇

A post shared by alya_manasa (@alya_manasa) on

இப்படி ஒரு நிலையில் ஆல்யா மானஸா குழந்தை பிறந்ததற்கு பின்னர் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை கண்ட பலரும் ஆல்யாவின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஆல்யா மானஸா குழந்தை பிறந்தகற்கு பின்னர் ஒரு புதிய தொடரிலும் கமிட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement