12 வயதில் டிக் டாக், இன்று விஜய் டிவி சீரியல் நடிகை – ராஜா ராணி சரவணன் தங்கச்சி பார்வதியா இது?

0
5269
parvathy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பல சீரியல்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஹீரோவாக சரவணனும், ஹீரோயினாக சந்தியாவும் நடிக்கிறார்கள். கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு தன் IPS கனவை சந்தியா எப்படி நிறைவேற்றுகிறார் என்பது தான் கதையின் கரு. மேலும், இந்த சீரியலில் சரவணனுக்கு தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வைஷூ சுந்தர்.

-விளம்பரம்-

இவர் எப்போதும் டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்ற பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை வைஷூ சுந்தர் சோசியல் மீடியாவில் தற்போது பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்து ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளார்கள். பொதுவாகவே டப்ஸ்மாஷ், டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான பல பேருக்கு சின்னத்திரையில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் சோஷியல் மீடியாவின் மூலம் பிரபலமாகி சீரியலில் நடிக்க வந்தவர் தான் நடிகை வைஷூ சுந்தர். இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் வெளிவந்த ரன் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்துக்கொண்டிருந்தாலும் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் அடிக்கடி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை வைஷூ சுந்தர் தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சீருடையில் இருந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இவரை மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்து வந்த ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் பலருக்கும் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து “அடடா, இது நம்ம பார்வதியா! என்று வியந்து போய் சோசியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர். அதோடு இவருடைய பல புகைப்படங்கள் பேண்ட் ஷர்ட், சுடிதார், புடவையில் தான் அதிகம் இருந்தது. இந்த நிலையில் இவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கையும், சர்ப்ரைஸ்ஸையும் கொடுத்துள்ளது. மேலும், இவர் பல சார்ட் பிலிம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சோசியல் மீடியாவில் உள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நடிகை வைஷூ சுந்தர் அவர்கள் தன்னுடைய நடிப்பு பயணத்தை குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டிருந்தார். இவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம். இவர் பிசியோதெரபி படித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவின் மீது இருந்த அதிக ஆசையின் காரணமாக நடிக்க வந்து விட்டார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே டிக்டாக் வீடியோக்கள் செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்த வண்ணம் உள்ளார். ஒருவழியாக பிசியோதெரபி படித்து முடித்தவுடன் சினிமாவில் நடிப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைத்தது என்றும்,

அந்த நேரத்தில் தான் யூடியூபில் ஆல்பம் சாங் ஒன்று நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதோடு அங்கிருந்து தான் இவருடைய நடிப்பு பயணம் தொடங்கியது என்றும் பல சீரியல்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இப்போது இவர் சூட்டிங், சீரியல் என்று பயங்கர பிஸியாக இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement