சத்தமில்லாமல் திடீர் திருமணம் முடித்த ராஜா ராணி சீரியல் பிரபலம். வெளியான புகைப்படங்கள்.

0
865
Senthil
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் நடிகர் திடீர் என்று திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2.

-விளம்பரம்-

கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து நாம் தொடங்கலாம்’ – ஒரு வழியாக அமீர் காதலை ஏற்ற பாவனி. இதோ அவரின் பதிவு.

ராஜா ராணி 2 சீரியல் :

அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய நடிகை:

மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார். இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். பின் சரவணன் குடும்பத்திற்கு ஆதி செய்த வேலை தெரிய வருகிறது.

சீரியலின் கதை:

இதனால் மொத்த குடும்பமும் ஆதியின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து ஆதி-ஜெசி திருமணம் நடக்குமா? என்ற பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் நடிகர் திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, சீரியலில் ஹீரோ சரவணனின் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலாஜி தியாகராஜன் தான்.

பாலாஜி தியாகராஜன் திருமணம்:

இவர் சீரியலில் மட்டுமில்லாமல் குறும்படத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் யூடியூப், வெப் சீரிஸ் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று பாலாஜி தியாகராஜனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். மேலும், ராஜா ராணி 2 குழுவினர் பாலாஜியின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement