‘நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து நாம் தொடங்கலாம்’ – ஒரு வழியாக அமீர் காதலை ஏற்ற பாவனி. இதோ அவரின் பதிவு.

0
418
pavni
- Advertisement -

முதன் முதலாக பாவனி சமூக வலைத்தளம் மூலம் அமீருக்கு புரொபோஸ் செய்திருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான நபர்களாக பாவனி-அமீர் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென பிக் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

பாவனி-அமீர் பட வாய்ப்பு:

ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் டைட்டில் வின்னர் அமீர்- பாவனி தான். அப்போது பாவனி, இந்த நிகழ்ச்சியில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால், விஜய் டிவி தான் கட்டாயப்படுத்தி ஆட வைத்தார்கள் என்று கூறி இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதையும் அறிவித்திருக்கிறார்கள். இதனை அடுத்து பலரும் பாவனி-அமீர் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அமீருக்கு நேரடியாக பாவனி ப்ரபோஸ் செய்து இருக்கிறார்.

ப்ரொபோஸ் செய்த பாவனி:

அதில் அவர், உங்களுடன் நடனம் ஆடுவது மிகப்பெரிய சவால் இருந்தாலும் நீங்கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சரியாக நடனமாட தெரியாத என்னை டைட்டில் வின்னர் பட்டம் பெரும் அளவிற்கு ஆட வைத்திருக்கிறீர்கள். இது ஒரு சிறப்பான பயணம். இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்து இருக்கிறேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் மிக சிறந்த மனிதர், மாஸ்டர், உறுதியானவர், நல்ல நண்பர். நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து நாம் தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் மிக சிறந்த ஜோடியாக இருப்பீர்களா? அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா? ஐ லவ் யூ என்று பாவனி ரெட்டி கூறி இருக்கிறார். ஒரு வழியாக பாவனி அமீருக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததை நினைத்து ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள்

Advertisement