சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடிக்க மறுத்த ராஜா ராணி சீரியல் நடிகை.!

0
274
Sarkar

இளையதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இரண்டாவது முறையாக கை கோர்த்துள்ள படம் தான் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ராதாரவி, பழ கருப்பையா, வரலட்சமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

sarkar

மேலும், இந்த படத்தில் விஜய் டிவியில் ‘ ராஜா ராணி, மாப்பிள்ளை ‘ போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வைஷாலியும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை வைஷாலி.

இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகை வைஷாலி, ‘சர்கார் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தோழியாக நடிக்க எனக்கு படக்குழுவில் அழைப்பு வந்தது. நானும் விஜய் படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால், அங்கு போன பின்பு எனக்கு வேறு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார்கள்.கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டேன்.

vaishali

நான் சர்கார் படத்தில் விஜய் சாருடன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் நடித்துள்ளேன்.ஆனால், அவரை நான் நேரில் பார்த்துவிட்டேன் அதுவே எனக்கு போதும். இந்த படத்தில் விஜய் சாருடன் நடிக்கும் போது எனக்கு கையெல்லாம் நடுங்கி மிகவும் பதட்டத்தில் இருந்தேன். ஆனால், விஜய் சாரும் மற்றும் முருகதாஸ் சாரும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தனர். இந்த படத்தில் நடித்தது மிகவும் ஒரு நல்ல அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.