‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இவர்கள் இருவரும் சேர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிற்றர்கள். பின் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.
செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி :
பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்கள். மேலும், இந்த சிங்கர் நிகழ்ச்சி இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் புஷ்பா.
சூப்பர் ஹிட் அடித்த வாயா சாமி :
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். செம்மர கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அதோடு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற ‘வாய்யா சாமி’ என்கிற பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது,
அம்மாவின் முதல் தியேட்டர் விசிட் :
வாய்யா சாமி பாடலை பாடும்போது எனக்கு ரொம்பவே படபடப்பாக இருந்தது. தெலுங்கில் அந்த பாட்டை கேட்ட போது அவ்வளவு அழகாக இருந்தது. அதனால் அந்த ஃபீல் கொஞ்சம் குறையாமல் தமிழில் கொடுக்கணும் என்று நினைத்தேன். ஆனால், இந்தளவுக்கு பாட்டு ரீச்சாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னோட அம்மா படத்துக்கு எல்லாம் போக மாட்டார்கள். அவர்கள் போய் ரொம்ப வருடம் ஆச்சு.
விஜய் 66 பாடுகிறீர்களா :
மேலும், அவர்கள் இந்த பாட்டை கேட்டுட்டு முதன்முறையாக புஷ்பா படத்துக்கு கூட்டிட்டு போக என்று சொல்லி இருக்காங்க. அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷமான விஷயம். அதே மாதிரி விஜய்யின் 66 வது படத்தில் நாங்கள் பாடுகிறோம் என்று பலரும் சொல்லி இருந்தார்கள். இது முற்றிலும் வதந்தி. அப்படி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. தலயுடைய படத்தில் பாடிவிட்டோம். தளபதிக்கு பாட காத்து கொண்டு இருக்கோம்.
விஜய் படத்தில் பாடும் நம்பிக்கை :
விஜய் படத்தில் பாடும் வாய்ப்பு கூடிய விரைவில் அமையும் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் படம் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.