என் கணவருக்கு நான் கொடுத்த பிறந்தநாள் பரிசு அவர் மறக்க மாட்டார்.!

0
834
Senthil
- Advertisement -

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகுக்கு அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு அவரே எதிர்பார்க்காத பரிசு ஒன்று கொடுத்து அசத்தியிருக்கிறார், ராஜலட்சுமி

-விளம்பரம்-
ராஜலட்சுமி

இதுகுறித்து பேசிய ராஜலக்ஷ்மி ‘ பொதுவாகவே என் பிறந்தநாளுக்கு அவரும், அவர் பிறந்தநாளுக்கு நானும் எந்த சர்ப்ரைஸும் பண்ணிக்க மாட்டோம். அவர் ரொம்ப நாளா ஆர்மோனியப் பெட்டி வாங்கணும்னு சொல்லிட்டே இருந்தார். ஆர்மோனியப் பெட்டி வாங்குறது பெரிய விஷயமில்லை.

இதையும் படியுங்க : ரஜினி மனைவி லதாவை எம் ஜி ஆருடன் மோசமாக இணைத்து பேசிய கஸ்தூரி.! 

- Advertisement -

கடைக்குப் போனா வாங்கிக்கலாம். ஆனா, இசைத்துறையில் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறவங்க கையால ஆர்மோனியத்தை வாங்கினால் அது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்னு அவர் சொல்லிட்டே இருந்தார்.
அந்தச் சமயத்தில்தான் இசைஞானி இளையராஜா ஐயாவுடைய ஆபீஸ்ல இருந்து வாய்ஸ் டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க.

ராஜலட்சுமி

ஐயாகிட்ட, ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் வாங்கி பிறந்தநாள் பரிசா என் கணவருக்குக் கொடுக்கலாமேன்னு தோணுச்சு .அப்புறம் எப்படியோ இளையராஜா ஐயா கிட்ட கையெழுத்து வாங்கிட்டோம். அதனை என் கணவருக்கு கொடுக்கும் போது அவர் அவ்வளவு சந்தோசப்பட்டார்.

-விளம்பரம்-

Advertisement