‘அஜித்தை அறிமுகம் செய்ய என் மனைவியை அழைத்தேன், அப்போது அவர்’ – அஜித் குறித்து ராஜமௌலி சொன்ன செம தகவல்.

0
587
ajith
- Advertisement -

பாகுபலி பிரம்மாண்டத்தை தொடர்ந்து ராஜமௌலி அவர்கள் தற்போது ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'(RRR) என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் தற்போது ராஜமௌலி இயக்கிய RRR படம் மிகப்பெரிய வெற்றியை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், இந்த படத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்

-விளம்பரம்-

பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் RRR :

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், பல தடைகளுக்கு பிறகு இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் டிவியில் RRR குழு :

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் அணைத்து மொழி ப்ரோமோஷனிலும் தீவிரமாக செய்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். அப்போது அஜித் குறித்து சுவாரசியமான விஷயம் என்றை பேசியுள்ளார்.

அஜித் குறித்து பேசிய ராஜமௌலி :

இதுகுறித்து பேசிய ராமோஜி ‘ பிலிம் சிட்டியில் ஒரு முறை அஜித்தை சந்தித்தேன். அங்கு ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும். அங்கு நிறைய பேர் இல்லை. அஜித் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் அவரே எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார். என்னை அழைத்து சென்று அவரது டேபிளில் அமர வைத்தார். அதன் பின் தூரத்தில் அமர்ந்து இருந்து என் மனைவியை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று அவரை அழைத்தேன்.

-விளம்பரம்-

தல பட்டத்தை தூக்கி எரிந்தது குறித்து :

ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே அவரே எழுந்து சென்று அழைத்து வந்து அமர வைத்தார். ‘I’m Ajth’ என அவரே என் மனைவியிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது அவரிடம் அதிகம் பேசினோம். தற்போது அவர் செய்த விஷயம் எனக்கு பெரிதாக inspire செய்தது. கோடிகணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கிறார்கள். ‘தல’ என்பதை நீக்கிவிட்டு அஜித் குமார் அல்லது ஏகே என்று மட்டும் கூப்பிட சொன்ன அவருக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று கூறியுள்ளார்.

விஜய் குறித்து பேசிய ஜூனியர் NTR :

அதே போல விஜய் குறித்து பேசிய ஜூனியர் NTR , விஜய்யுடன் நான் நிறைய முறை பேசியுள்ளேன். பெரிய நடிகர் என்ற தலைகனம் எல்லாம் இல்லாமல் சாதாரண மனிதராக இருப்பார்.மாஸ்டர் படத்திற்கு பிறகு கூட அவரிடம் பேசி இருந்தேன், நல்ல நண்பர், என்னை விட சினிமா துறையில் சீனியர் அவர், எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement