உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மாஸ் ஹிட்டானது. தற்போது, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் ‘தளபதி’ விஜய்-யின் ‘பிகில்’ படத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸும் போட்டிருக்கிறார் நமல் ராஜபக்சே. அதில் “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ‘தளபதி’ விஜய் நடித்த படம் ‘பிகில்’. இது எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த லாக் டவுன் டைமில் நான் தொடர்ந்து இப்படத்தை பார்த்து கொண்டே இருக்கிறேன். இப்போது வரை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே கவுண்ட் தெரியவில்லை” என்று நமல் ராஜபக்சே பதிவிட்டிருக்கிறார்.
பிரபல இயக்குநர் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.