ராஜேஸ்வரி பிரியா இவர் விஜயை பற்றி பேசி சமூக வலைதளங்களில் புகழ் பெற்று வந்தவர். இவர் லியோ படத்தின் முதல் பாடல் வெளியானதில் இருந்து அதில் அவர் சிகேரெட் பிடிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார். அதன் பின் லியோ படத்தின் டிரைலர் குறித்தும் அவருடைய கருத்தை கூறி வருகிறார். அதற்க்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர் ஒரு நேர்காணலில் விளக்கம் அளித்துள்ளார். சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.

தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. லியோ படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. ரசிகர்கள் அதை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அவர் கூறியது:

லியோ திரைப்படம் இது எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அதிக அளவில் சிறுவர்கள் ரசிகர்களாக கொண்ட நடிகர் விஜய் தான். ஒரு சமுதாய சிந்தனை இல்லாமல் அவர் இப்படி பண்ணலாமா என்கிற ஆத்திரம் தான் எனக்கு. ஆபாச வார்த்தையை பயன்படுத்துவது பெண்களையோ கொச்சைப்படுத்தும், எதிலும் தாயை இழிவு படுத்துவது போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை எந்த ஒரு பெண்ணும் ஏற்கமாட்டார்கள் அதைத்தான் நான் எதிரொலித்தேன். எனக்குத் தெரிந்த சென்சார் சம்பந்தப்பட்ட வார்த்தையை மீயூட் செய்து விடும் படத்தில் அது மீண்டும் வராது.

அவ்வாறு மீண்டும் வந்தால் சென்சருக்கு மீண்டும் கோரிக்கை வைப்பேன். அந்த வார்த்தை தேவையில்லாத ஒன்று அது விஜய்யின் வாயால் இருந்து வந்ததால் இன்னும் பல பேரை அந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். பெண்ணின் மனதை பாதிக்கும் அந்த வார்த்தையை கேட்டால் எந்த பெண்ணும் உடைந்து போவார்கள். அதை ஏன் விஜய் செய்தார் என்று ஆதங்கம் தான் எனக்கு எழுத விஜயை மட்டும் நான் குறி வைத்து தாக்கவில்லை. அதற்கு முன் நான் நிறைய படங்களை போன்று செய்திருக்கின்றேன். விஜய் சொல்வது யாரும் தவறு என்று கூற மாட்டார்கள்.

Advertisement

அது தவறும் மற்றவர்கள் செய்யவில்லையா என்று தான் கேட்கிறார்கள் இது புதிரா இருக்கிறது. ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கு இவர்களாகத்தான் இருக்க வேண்டும் இவர்களாக இருக்கக் கூடாது என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது எனக்கு ஆறாவது படிக்கும் பையன் இருக்கான் என்னுடைய மகன் மாதிரித்தான் மற்றவர்களை நான் பார்க்கின்றேன். உண்மையாக சிந்தித்தும் ரசிகர்கள் ஆவது தான் பார்க்க வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவர் 2021 ஆம் ஆண்டு என் கட்சியை நான் பதிவு செய்திருக்கின்றேன். காலி சிலிண்டர் சின்னத்தில் வேட்பாளர் நிறுத்தி உள்ளேன்.

Advertisement

அப்படி இருக்கும் அப்படி இருக்கும் போது நான் ஒரு தலைவரை முன்வைக்கும் கருத்தை விளம்பரம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். நான் புகார் அளித்த மாதிரி பற்றி தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் விஜய் மரியாதை தெரியாதவர் தான் அப்படித்தான் நான் கூறுவேன். நான் பொது வாழ்க்கையில் வந்தது 2017 ஆம் ஆண்டில் தான் அதற்கு முந்தைய படங்கள் பற்றி நீங்கள் சொன்னால் நான் டைம் ட்ராவல் செய்து தான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் கூறியவர் நான் வடசென்னை படத்தை பார்க்கவில்லை அதில் வரும் வார்த்தைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எல்லா படங்களையும் பார்க்க வேண்டிய வேண்டுமென்று அவசியம் கிடையாது. என் குழந்தைக்காக நான் செலவிடுகிறோம். விஜய் படம் வந்தால் நூறு சதவீதம் திரையில் தான் நாங்கள் பார்க்கிறோம். அதனால் தான் நான் இப்படி பேசுகிறேன். நீங்கள் எதார்த்தம் என்கிறீர்கள் மக்கள் மொழி என்கிறீர்கள் சீமான் இது எல்லாம் ஒரு மொழியா பெண்களை பொதுவாக எண்ண வேண்டுமானாலும் பேசலாம் கடந்து போவார்கள் என்பதை மாற்ற வேண்டும். சீமான் பேச்சுக்கள் தமிழகப் பெண்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ராஜேஸ்வரி பிரியா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement