மகளின் சங்கி குறித்த பேச்சு, படத்தின் ப்ரோமோஷனா என்று கேட்ட பத்திரிகையாளர் – ரஜினி அளித்த விளக்கம்.

0
409
- Advertisement -

லால் சலாம் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி சங்கி இல்லை என்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து குறித்து ரஜினி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் தான் லால் சலாம் படம். விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் கபில்தேவையும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு லால் சலாம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தவர்கள், பிறகு வெளியீட்டு தேதியை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு மாற்றினர். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ‘சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன் மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும்.

சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை ரஜினி சந்தித்து இருந்தால் அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் மகள் ஐஸ்வர்யா பேசும்போது என் தந்தையை சங்கி என்று சொல்லாதீர்கள் என்று கூறியிருந்தார். ஒரு படத்தில் பிரமோசனுகாக இப்படி பேசலாமா என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கேயும் சொல்லவில்லை அப்பா ஒரு ஆன்மீகவாதி அனைத்து மதங்களையும் விரும்பவார்.

அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பது தான் அவரின் பார்வை என்று பதில் அளித்தார். அப்போதும் விடாத பத்திரிக்கையாளர் லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் காகத்தான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று சொல்கிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறினார். மேலும் நான் சலாம் படம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டதற்கு நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று பதில் அளித்த ரஜினிகாந்த். மேலும், படத்தில் என்ன கருத்து இருக்கிறது என்று கேட்டதற்கு படத்தை பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்

Advertisement