விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றதால் பிஸ்மியை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் – கண்டனம் தெரிவித்து சீமான் வெளியிட்ட அறிக்கை.

0
638
seeman
- Advertisement -

விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை பற்றியும் விஜய்யை பற்றியும் பிஸ்மி என்ற பத்திரிகையாளர் கூறியிருக்கும் கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.தமிழ் சினிமா உலகில் பல காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசி இருந்தது பெரும் பேசுபொருளானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த முன்னாள் சூப்பர்ஸ்டார் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜு கூறவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் ரசிகர்கர்களே விஜய்யை அந்த இடத்திற்கு கொண்டு வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளரான பிஸ்மியின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு யூடியூபில் ரஜினிக்கந்தை விமர்சித்து போட்டுள்ள பதிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ஐயா ரஜினிகாந்த் அவர்கள் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement