ரஜினி முதல் அஜித் வரை நடித்த சண்டை கலைஞர். தற்போது தள்ளு வண்டி கடை.

0
20209
stunt
- Advertisement -

சினிமா திரை உலகில் 20 வருடங்களுக்கு மேலாக ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய கிருஷ்ணன் அவர்கள் தற்போது சென்னை அடையாற்றில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கிறார். 20 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்த இவருக்கா இந்த நிலைமை. இது குறித்து இவரிடம் பேட்டி எடுத்த போது கிருஷ்னன் கூறியது, நான் சினிமா ஆர்டிஸ்ட் மட்டும் இல்லாமல் பவுன்சர் கூட. இருந்தாலும் இப்போ எனக்கு சோறு போடுவது என்னுடைய தள்ளுவண்டி கடை தான். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அடையாறு தான். நான் பத்தாவது முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு கிளம்பிவிட்டேன். இன்றுவரை நான் எத்தனையோ வேலைகளை பார்த்துள்ளேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு பாடி பில்டிங் மேல ஒரு ஆசை, ஆர்வம், உயிர் என்று சொல்லலாம். ஒரு நாள் கூட உடற்பயிற்சி செய்யாமல் என்னால் இருக்க முடியாது. இன்று வரை கூட அப்படி தான் உள்ளேன். ஜிம்மிலேயே தான் நான் அதிக நேரம் இருப்பேன்.

-விளம்பரம்-
Krishnan

- Advertisement -

இந்த முயற்சி பயிற்சி தான் என்னை 20 வயதில் மிஸ்டர் தமிழ்நாடு டைட்டில் வாங்க வைத்தது. அதற்கு பிறகு நான் மிஸ்டர் இந்தியா வரையும் சென்றேன். பிறகு என்னுடைய உடம்பை பார்த்து தான் சினிமாவில் வாய்ப்பு தந்தார்கள். இதுவரை நான் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் அடையாறு இந்திரா நகர் பகுதியில் தள்ளுவண்டியில் இடியாப்பம், பீப் விற்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். சினிமாவில் ஒரு காலத்தில் full-time ஆக இருந்த நான் தற்போது part time ஆக மாற்றிக் கொண்டு என்னுடைய பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாடிபில்டிங் துறையில் இருக்கிற எனக்கு பீப் பற்றி நன்றாக தெரியும். நான் சின்ன வயதில் இருந்தே சாப்பிட்டு வர மாமிசம் இது தான். ஆனால், இப்போதெல்லாம் மாட்டு கறியை வைத்து நிறைய அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

உண்மையாலுமே மாட்டிறைச்சி புரதம் மற்றும் சத்துக்கள் நிறைந்த மாமிசம். மேலும், எனக்கு சிறு வயதிலிருந்தே சமையலிலும் ஆர்வம். அதனால் கடை வேலைகளை சுலபமாக பார்க்க முடிந்தது. அப்படியே பார்ட் டைமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு நிலையான வருமானம் என்று சொன்னால் அது இந்த தள்ளுவண்டி கடை தான். 20 வருட சினிமா உலகில் நான் ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் வரை எல்லோருக்கும் நடித்திருக்கிறேன். சினிமா உலகில் எங்கள மாதிரி கலைஞர்களுக்கு குறைவான சம்பளம் தான் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு சூட்டிங் நடித்தால் எனக்கு அதிகபட்சம் 2000 கிடைப்பது பெரிய விஷயம். ஆனால், மாதத்தில் பத்து நாள் கூட வேலை இருக்காது. நிரந்தர வருமானம் என்று எங்கள மாதிரி ஆட்களுக்கு கிடையாது.

-விளம்பரம்-
Mr Tamilnadu Krishnan

அதிலும் உடல்வாகை நல்லா வைத்திருந்தால் தான் எங்களால் சினிமாவில் பிழைக்க முடியும். அதனால் அவர்கள் தரும் சம்பளம் பத்தாது. ஒரு நாளைக்கு எங்களுக்கு 500 ரூபாய் செலவாகும். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் நான் சினிமா துறையில் நீடிக்க பல போராட்டங்களை செய்தனேன். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் முடியலை. என் மனைவி, பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு சினிமாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தள்ளுவண்டி கடையை தொடங்கினேன். கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஹீரோ, ஹீரோயினுக்கு கோடி கணக்கில் சம்பளத்தை கொடுக்கிறீர்கள். எங்கள மாதிரி பிழைப்பை தேடி வரும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கொஞ்சம் சம்பளம் உயர்த்தி கொடுங்கள். ஏனென்றால் எங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருக்கிறது என்று விரக்தியுடன் கூறினார் கிருஷ்ணன்.

Advertisement