பல ஆண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்திக்கப்போகும் ரஜினி மற்றும் அஜித். எப்படி தெரியுமா ?

0
2052
ajith-rajini
- Advertisement -

பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ள அல்டிமேட் ஸ்டார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர உற்சாகத்தில் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் வினோத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் வெளியான “நேர்கொண்ட பார்வை” படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதுமட்டும் இல்லைங்க இந்த படம் வசூல் ராஜாவாக திகழ்ந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர், தல அஜித் மூவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்து “வலிமை” என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். அதோடு யுவன், நீரவ் ஷா இவர்களும் இந்த படத்தில் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168 படம் குறித்து பல தகவல் வந்துள்ளது. அதோடு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : 7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறேன். இது தான் என் புது பெயர் – நடிகர் ஜெய்.

மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளார்கள்.மேலும், நடிகர் அஜித்தின் பேவரட் இயக்குனர் சிறுத்தை சிவா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் “தலைவர் 168” படத்தில் நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் என்றும் தெரிய வந்து உள்ளது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, ரஜினியுடன் சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது.

-விளம்பரம்-
Image result for valimai darbar

இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நடக்கும் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் அஜித் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.

Image result for darbar

2009 ஆம் ஆண்டு நடை பெற்ற அசல் படத்தின் பூஜை மற்றும் அதே ஆண்டில் நடைபெற்ற பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிகளில் தான் அஜித் மற்றும் ரஜினி இருவரும் பங்கேற்றனர். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் “தலைவர் 168” படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement