7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறேன். இது தான் என் புது பெயர் – நடிகர் ஜெய்.

0
42596
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ஜெய் இவர் முதன் முதலில் விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவரது தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஜெய். அந்த படத்தில் அச்சு அசலாக விஜய் போலவே இருந்ததால் இவர் உண்மையில் விஜய்யின் தூரத்து சகோதரார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. பகவதி படத்திற்கு பின்னர் 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்துவிட்டார், நடித்தும் வருகிறார்.

-விளம்பரம்-
Image result for actor jai converted to muslim

- Advertisement -

அதன் பின்னர் இவர் நடித்த ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை அடைந்தது அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது. அதேபோல இந்த படத்தில் நடித்தபோது இவருக்கும் நடிகை நஸ்ரியா அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ,ஜெய் மற்றும் நஸ்ரியா இருவரும் இணைந்து திருமணம் என்னும் நிக்கா என்ற படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் நஸ்ரியா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்றும் கூறப்பட்டது.

இதையும் பாருங்க : தனுஷ் திருமணத்தின் போது அனிருத் எப்படி இருக்கார் பாருங்க. அறிய புகைப்படம் இதோ.

அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் ஜெய்யும் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜெய்யிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். எந்த சாமியும் கும்பிடாத பிள்ளை தற்போது ஏதோ ஒரு சாமியை கும்பிடுகிறான் என்று வீட்டிலும் சந்தோஷப்பட்டு இருக்கிறார்கள். நான் மதம் மாறினாலும் இன்னும் என்னுடைய பெயரை மாற்றவில்லை. இதனால் அஜீஸ் ஜெய் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Related image

இது ஒருபுறம் இருக்க நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பலூன் படத்தை தயாரித்து இருந்த நந்தகுமார் பேட்டியளித்தபோது பலூன் படத்தின் போது நடிகை அஞ்சலியை, இயக்குனர் மேடம் என்று கூப்பிடவில்லை என்று அடுத்த நாள் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டார்கள். மேலும், இருவரும் பல மணி நேரம் ஒரே கேரவனில் இருந்தார்கள் என்றெல்லாம் புலம்பித் தள்ளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement