தமிழ் சினிமாவில் அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி, கமல் படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக திகழ்பவர்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருவருக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக விரும்பும் தமிழ் நடிகரும் கமல்ஹாசனால் அல்லது ரஜினிகாந்தால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டினர். மேலும், இந்த இரண்டு மாபெரும் நடிகர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் கூட மகத்தான ஒன்றாக இருந்து வருகிறது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதால், இருவரும் ஒன்றாக திரை இடத்தைப் பகிரத் தொடங்கி இருந்தார்கள்.
அந்த நாளிலிருந்து இருவரும் சிறந்த நண்பர்களாக அடையாளம் காணப்பட்டனர். கமல்ஹாசனுடன் ஒரு சில கதாபாத்திரங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தோன்றிய பிறகு ரஜினிகாந்த் திரைப்படங்களில் தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் ரஜினி மற்றும் கமல் அதன் ஒன்றாக நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் ஹிட் என மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்திருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரப்பு மாஸாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்குகிறார். தற்போது அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கமல் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த அண்ணாத்த படம் கலவியான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக வாரி இறைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இண்டஸ்ட்ரி இட் பிரிவில் ரஜினி, கமல் ஹிட் கொடுத்திருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினிகாந்த் 10 படங்களும், கமலஹாசன் மூன்று படங்களும் இன்டஸ்ட்ரி பிரிவில் கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் பட்டியல் இதோ,
ரஜினிகாந்த் கமல் ஹாசன்
- தளபதி – 1991 1. தேவர் மகன் – 1992
- மன்னன் – 1992 2. இந்தியன் – 1996
- அண்ணாமலை – 1992 3. விக்ரம் – 2022
- பாட்ஷா – 1995
- படையப்பா – 1999
- சந்திரமுகி – 2005
- சிவாஜி – 2007
- எந்திரன் – 2010
- கபாலி – 2016
- 2.0 – 2018