தர்பார் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி சொன்ன தன்னுடைய முதல் கார் – புகைப்படத்தை வெளியிட்ட மகள்.

0
1203
rajini

தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறையாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்களும், பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தையான ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக ரஜினியின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவர் மனைவி லதா, நடிகர் ராகவா லாரன்ஸ், சந்தோஷ் சிவன். எ.ஆர்.முருகதாஸ் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமாவிலும் சந்தித்த பல கஷ்டங்களை பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, நான் நடிக்கத் துவங்கிய காலத்தில் பல இன்னல்களை சந்தித்து உள்ளேன். மேலும், ஆரம்பத்தில் நான்கைந்து படங்களில் நடித்து இருந்தேன்.

- Advertisement -

அப்போது ‘பதினாறு வயதினிலே’ படம் வெளியாகி நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னிடம் நடிக்க கால்சீட் கேட்டார். நானும் ஓகே சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கி விடும். இப்போது என்னிடம் பணம் இல்லை, நாளை கொடுத்து அனுப்புகிறேன் என அந்த தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அந்த புரொடக்ஷன் மேனேஜர் பணம் கொண்டு வரவில்லை. அது பற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்ட போது நாளை சூட்டிங் வாங்க மேக்கப் போடுவதற்கு முன்பு தருகிறேன் என்று கூறினார். நானும் ஷூட்டிங்கும் சென்றேன். அங்கு நான் பணம் கொடுத்தால் தான் மேக்கப் போடுவேன் என்று கூறினேன். அதற்கு பிறகு அங்கு வந்த தயாரிப்பாளர் என்னை மோசமாகத் திட்டி உனக்கு படத்தில் கேரக்டர் இல்லை வெளியே போ என சொன்னார்.

நானும் போகிறேன் கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு நீ நடந்து போ, கொடுக்க முடியாது என கூறினார். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பயங்கரமாக உழைக்கத் தொடங்கினேன். பின்னர் என் வாழ்க்கையில் முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தினேன் என்று கூறினார்.இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினி வாங்கிய அந்த காரின் புகைப்படத்தை ரஜினியின் பிறந்த நாளையொட்டி ரஜினி மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement