விக்ரம் வெற்றியின் பொறாமையால் தான் சிவாஜியை தற்போது கொண்டாடி வருகிறார்களா ரஜினி ரசிகர்கள்.

0
411
vikram
- Advertisement -

விக்ரம் படத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாததால் தான் தற்போது ரஜினி ரசிகர்கள் சிவாஜி படத்தை கொண்டாடி வருகின்றனர் என்று கமல் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் முதல் கமல் படம் இது என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தை பெற்று இருக்கிறார் கமல்.

- Advertisement -

பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :

இதுவரை வந்த கமல் படங்களிலேயே அதி விரைவாக 200 கோடி வசூல் செய்த முதல் கமல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்த கமல் லோகேஷ் கனகராஜுக்கு புதிய கார், 13 துணை இயக்குனர்களுக்கு புதிய பைக், சூர்யாவிற்கு தனது விலையுயர்ந்த rolex வாட்ச் என்று பரிசுகளை அள்ளிக்கொடுத்து இருந்தார் கமல்.

கொண்டாடப்பட்ட சிவாஜி :

இந்த படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகினாலும் இந்த படத்தை பற்றி சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கமல் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பணிப்போரில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் தான். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘சிவாஜி, எந்திரன், 2.0’ என மூன்று மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார்.

-விளம்பரம்-

pan இந்திய லெவலில் வெற்றி பெற்ற படம் :

இதில் ‘சிவாஜி’ திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன், பட்டிமன்றம் ராஜா, சண்முகராஜன், பிரமிட் நடராஜன், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், கொச்சின் கனீஃபா ஆகியோர் நடித்திருந்தனர். சையமைத்திருந்தார்.ரஜினிக்கு தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ரசிகர் பட்டாளமும், மார்க்கெட்டும் உள்ளதால் இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது.

சிவகார்த்திகேயன் போட்ட பதிவு :

படத்தில் ரஜினி ‘மொட்ட பாஸ்’ என்ற கேரக்டரில் கிளைமாக்ஸ்ஸில் வந்து அசத்துவார். இந்த படம் வெளியாகி நேற்றொரு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ட்விட்டரில் 15YearsOfSivaji என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங் ஆனது. அவ்வளவு ஏன் நடிகர் சிவகார்த்திகேயன் கூட இந்த படத்தை 15 முறை திரையரங்கில் பார்த்தாக பதிவிட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது.

விக்ரம் வெற்றி தான் காரணமா :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ரஜினியின் ரசிகர்கள் 15 ஆண்டுக்கு முன் வெளியான சிவாஜி படத்தை கொண்டாடி வருகின்றனர் என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கமல், ரஜினியுடன் தான் எப்போதும் நடிக்க தயார் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement