ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசிய முழு வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். கோலிவுட்டில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

Advertisement

எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர்.

மேலும், இந்த படத்தின் ஹக்கும் பாடல் வெளியான போதே அதில் இடம்பெற்ற வரிகளை விஜயை சீண்டுவது போல இருப்பதாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால், அது டிவியில் ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே ரஜினி, விஜய்யை தாக்கி பேசிவிட்டார் என்ற சமூக வலைத்தளத்தில் சர்ச்சை எழுந்தது.

Advertisement

அதிலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி சொன்ன கழுகு மற்றும் காக்கா கதையால் விஜய் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த விழாவில் பேசிய ரஜினி நான் காக்கா என்று சொன்னதும் அந்த நடிகரை தான் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த் என்று மீடியாவும் சோசியல் மீடியாவும் கிளப்பிடுவார்கள். நான் இப்படி சொல்லியும் அவர்கள் அதை இதைத்தான் செய்யப் போகிறார்கள். இந்த உலகத்தில் குறை சொல்லாத வாயும் இல்லை, குறைக்காத நாயும் இல்லை என்று பேசி இருக்கிறார் ரஜினி.

Advertisement

இப்படி விழாவில் ரஜினி பேசிய முழு வீடியோவை தொடர்ந்து இதற்கு முன்னர் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. மேலும், இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய ரஜினி இந்த படத்தில் இடம்பெற்ற ஹக்கும் பாடல் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக செய்யப் போகும் பாடல் என்று அனிருத்தும் நெல்சனும் சொன்னார்கள். ஆனால், அந்த பாடலில் இடம்பெற்ற சூப்பர் ஸ்டார் வரிகளை நான் நீக்க சொன்னேன்.

அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே ஒரு தலைவலி தான். எனக்கு 77லேயே முதன் முதலாக தானு, சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தபோது நான் வேண்டாம் என்று விட்டேன். அதற்கு காரணம் அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்தார், கமல் உச்சத்தில் இருந்தார். அப்போது போய் நான் சூப்பர் ஸ்டார்னு சொன்ன அவங்களுக்கு என்ன மரியாதை இருக்கும். அவர்கள் இருக்கும் போது என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது சரியாக இருக்காது என்று எண்ணி நான் அதை சொன்னேன். ஆனால், பலரும் ரஜினிகாந்த் பயந்துவிட்டார் என்று சொன்னார்கள். உண்மையில் நான் இரண்டு பேருக்கு தான் பயப்படுவேன் ஒன்று கடவுளுக்கு இன்னொன்று நல்லவங்க, அவங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது, அவங்க சாபம் பளிச்சிடும் என்று பேசி இருக்கிறார்.

Advertisement