இருந்தாலும் கடலுமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் – மகள் படமாக இருந்தாலும் 40 நிமிட கெமியோ ரோலுக்கே இத்தனை கோடி வாங்கியுள்ள ரஜினி.

0
565
- Advertisement -

லால் சலாம் படத்தில் ரஜினி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கம் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி.

-விளம்பரம்-

விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா பேசிய சங்கி பற்றிய விஷயம் பெரும் சர்ச்சையானது.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இடம்பெற்றுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் மொத்தம் 40 நிமிட கேமியோ காட்சிக்கு 40 கோடி சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கியதாகவும்,  மேலும், தனது நீடிக்கப்பட்ட கேமியோ ரோலுக்கும் அவர் சம்பளம் பெற்றுள்ளதாவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த படத்தின் கதை குறித்து பேசிய ஐஸ்வர்யா ‘ இந்த படத்தில் அப்பா ஒரு இஸ்லாமியராக நடித்து இருக்கிறார்.  இந்தக் கதையில அதுக்கான காரணம் இருந்தது. அவர் சொல்ல வேண்டிய கருத்து அழுத்தமா இருந்தது. அவர் சொன்னா, இன்னும் அதிகமானவர்கள்கிட்ட அந்தக் கருத்துச் சேரும் அப்படிங்கறதால அவர் இந்த கேரக்டரை பண்ணியிருக்கார்.எல்லாருக்குமான ஒரு மெசேஜை படம் பேசும். நாங்க இந்தப் படத்துல சொல்ற கருத்துதான் எல்லாருக்குள்ளயும் ஆழமா இருக்கு.

ஆனா, அது ஏன் வெளிப்பட மாட்டேங்குது அப்படிங்கற விஷயம் கேள்வியா இருக்கு. பட ரிலீஸுக்கு பிறகு அது வெளிப்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரஜினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினி ஒரு கெமியோ ரோல் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement