விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகலில் போராட்டத்தில் நேற்று(நவம்பர் 8) துவங்கினர்.

Advertisement

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட அதிமுகவினர், படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் சர்கார் படத்தின் சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து சர்கார் படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று நீக்கிவிடுவதாக சர்கார் படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அதிமுகவினர் சர்கார் படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

Advertisement

Advertisement

சர்கார் படத்திற்கு பல்வேறு திரை கலைஞரகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement