செருப்பு போட முடியாமல் சிரமப்பட்ட ரஜினி, உதவ வந்த உதவியாளர். ரஜினி காட்டிய பெருந்தன்மை. ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ.

0
465
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கி இன்று இந்திய திரையுலகில் மிகப் பெரிய ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னை திரைப் பயணத்தை தொடங்கி இருந்தார். அன்று தொடங்கி இன்று வரை இவர் 168 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் பெற்றிருந்தார். இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : படத்துல குடும்பம் ஒத்துமையா இருக்கனும்னு சொல்றீங்க, உங்க குடும்பத்துல ஒருத்தர் தனியா இருக்காரே – ரிப்போர்ட்டர் கேள்வி, அருண்விஜய்யின் பதில்.

அண்ணாத்த படம்:

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட மீனா, நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

மீனாவின் கணவர் இறப்பு:

இந்நிலையில் ரஜினியின் எளிமை குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் காலமானது அனைவருக்கும் தெரிந்ததே. இது எல்லோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மீனாவின் கணவர் இழப்பிற்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். இதற்கு ரஜினிகாந்த் முதல் ஆளாக வந்திருந்தார்.

வைரலாகும் ரஜினி வீடியோ:

பின் ரஜினி அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே செல்லும்போது தனது காலனியை மாட்ட சிரமப்பட்டு இருந்தார். உடனே அருகிலிருந்தவர் அவர் காலனியை அணிவித்து விட முயற்சி செய்தார். அப்போது ரஜினி அவரை தடுத்து மேலே தூக்கி விட்டார். இப்படி சூப்பர் ஸ்டார் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அந்த பண்பை மாற்றாமல் அப்படியே இருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement