தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.
பல முறை இந்த படத்தின் வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த நிலையில் ஒருவழியாக இந்த படம் நேற்று தான் வெளியாகி இருந்தது. படத்தில் ஊருக்குள் கௌரவமாக பிஆர்வி குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பத்தின் இளைய மகனாக இருப்பவர் தான் ரவி(அருண் விஜய்). குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரகனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார்.
இதையும் பாருங்க : படத்தில் இருந்த பார்ப்பன விஷயம், சமரசம் செய்யாத கமல் – ஜென்டில் மேன் படத்தில் இருந்து விலக காரணம். அவரே சொன்ன வீடியோ இதோ.
யானை படத்தின் கதை :
என்னதான் அருண் விஜய் தனது அண்ணன்களை உடன் பிறந்தவர்கள் என்று பார்த்தாலும் அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவனாக தான் நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் வில்லன் லிங்கம்.அதை சுமுகமாக முடிக்க நினைக்கிறார் அருண் விஜய். அதற்காக அவர் பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. இந்த சமயத்தில் பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது.
இதில் அருண் விஜய் சிக்கிக்கொள்கிறார். இதனால் உடனடியாக அருண் விஜயை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள் அண்ணன்கள். இதன் பின் இறுதியில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? வில்லன் பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தது? அருண்விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
பத்திரிகையாளர் கேட்ட கேள்வி :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவெற்பை காண்பதற்காக இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் தியேட்டரில் விசிட் அடித்துவிட்டு பின்னர் பத்திரிகையாளரை சந்தித்து இருந்தனர். அப்போது படம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘படத்துல குடும்பத்தை விட்டு கொடுக்க கூடாது ஒத்துமையா இருக்கணும்னு காமிச்சு இருக்கீங்க’
பதில் சொல்லாமல் போன அருண்விஜய் :
ஆனா, உங்க குடும்பத்திலேயே ஒருத்தர் தனியா இருக்கார். அவங்க எப்ப நீ சேத்துக்கிட்டு ஒன்னு சேர போறீங்க’ என்று கேட்டு இருந்தார். இதற்கு அருண் விஜய்யும் ஹரியும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சிரித்தபடி அப்படியே இருக்க அருகில் இருந்த இவர் ‘இது படத்த பத்திய பேட்டி அதனால் படத்த பத்தி மட்டும் பேசு’ என்று சொன்னதும் அருண் விஜய்யும் ‘ஹம்ம்’ என்று தலையாட்டி இருந்தார்.