அஜித் படக் கதையை தனக்காக மாற்ற சொன்ன ரஜினி – மறுத்த இயக்குநர். மண்ணை கவ்விய படம்.

0
620
Ajithrajini
- Advertisement -

நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். ஏற்கெனவே, தமிழில் லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படமும் காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

- Advertisement -

லிங்குசாமி இயக்கும் அடுத்த படம் :

தற்போது இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் நல்ல வரேவேற்பை பெற்றுற்ள்ளது. இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், லிங்குசாமியின் சகோதரரும், திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆன சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்கள்.அதில் அவர்கள், ரன் படத்தின் பார்ட்-2 விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 2002ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் ரன்.

லிங்குசாமி பேட்டி :

இந்த நிலையில் தான் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடிக்க விரும்பியது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “ரன் படம் வெளியான போது அதனை பார்த்த ரஜினிகாந்த் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். ரன் படத்தில் வரும் பல காட்சிகளை அவர் நினைவு கூர்ந்து “பாதாள நடைபாதையில் வரும் ஷட்டரை மூடும் சண்டை காட்சி மிகப்பிரமாதமாக இருக்கிறது என்று நெகிழ்ந்து கூறினார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கேட்டார் :

அதற்கு பிறகு என்னிடம் அடுத்த படம் என்னவென்று கேட்டார், நான் ஜி படம் என்று கூறி படத்தின் கதையா கூறினேன். ஆனால் அவர் என்னிடம் கேட்டது இந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று. ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் ஒரு கல்லூரி மாணவன் எனவே உங்களுக்கு இந்த கதை சரியாக இருக்காது என்று நான் தெரிவித்தேன். ஆனால் இந்த கதையில் கல்லூரிக்கு பதிலாக நிறுவனமாக வைத்து கொண்டு அங்கே தேர்தல் நடக்கிறது, அதில் நான் வெற்றி வருவதாக கதையா வைத்துக்கொள்வோம் என்று கூறினார்.

ஜி படம் :

ஆனால் நான் அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படத்தை எடுக்க விரும்பியதால் நான் ரஜினிகாந்த் கூறியதற்கு மறுத்து விட்டேன் என்று அந்த பேட்டியில் கூறினார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அஜித் கதாநாயகனாக நடித்து த்ரிஷா கதாநாயகியாக நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அந்த படம் தோல்விடையைந்தது குறிப்பிடதக்கது.

Advertisement