சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்து இருக்கும் குழந்தை இந்த பிரபலத்தின் குழந்தை தானா ?வைரலாகும் புகைப்படம்

0
382
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

வைரலாகும் ரஜினி புகைப்படம்:

சமீப காலமாக ரஜினிகாந்த் உடைய பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அந்த குழந்தை வேற யாரும் இல்லைங்க, இந்திய சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகள் தான். அவரை தான் ரஜினிகாந்து தூக்கி வைத்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் திரைப்பயணம்:

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் குடும்பம்:

மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ரகுமான். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். இதனிடையே ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

Advertisement