விஜயகாந்த் மறைவிற்கு நேரில் சந்தித்து ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று முதல் சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில வாரமாகவே விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் விஜயகாந்தின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

விஜயகாந்தின் இறப்பு :

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் வந்து தன்னுடைய இரங்கலை தெரிவித்திருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி, நான் இப்போதுதான் கன்னியாகுமரி சூட்டில் இருந்து வந்தேன். நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. குறிப்பாக, அவர் நட்பிற்கு இலக்கணமாக இருந்தார். விஜயகாந்த் அவர்கள் நண்பர்கள், ரசிகர்கள், மீடியாக்கள் என யார் மீது வேணாலும் கோபப்படுவார். ஆனால், அவர் மீது யாராலுமே கோபப்பட முடியாது.

ரஜினிகாந்த் பேட்டி:

காரணம், அவருடைய கோபத்திற்கு பின்னால் நியாயம் இருக்கிறது. அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. அவருடைய அன்பிற்கு எல்லோருமே அடிமையாகி விடுவார்கள். அதற்காகத்தான் அவருக்கு அத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள். அவருக்காக உயிர் கொடுக்கும் நண்பர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள். விஜயகாந்த் வீரத்திற்கும், தைரியத்திற்கும் தகுதியானவர். அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் இருக்கிறது.

Advertisement

மறக்கமுடியாத நிகழ்வு:

அதில் இரண்டு என்னால் என்றுமே மறக்க முடியாது. நான் ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது மக்கள், மீடியாக்கள், ரசிகர்கள் என பல பேர் தொந்தரவு செய்து இருந்தார்கள். அப்போது விஜயகாந்த் தான் அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து என்னுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுத்திருந்தார். அதை என்னால் என்றும் மறக்க முடியாது. அதே போல் சிங்கப்பூர், மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பாக விழா நடந்து முடிந்து எல்லோருமே வண்டியில் எறிவிட்டார்கள். ஆனால், நான் வருவதற்கு தாமதமானது.

Advertisement

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அப்போது என்னை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. பவுன்சர்களால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ரொம்பவே திணறிவிட்டேன். அதை பார்த்த விஜயகாந்த் எல்லோரையும் விரட்டி அந்த இடத்திலிருந்து என்னை பாதுகாப்பாக வண்டிக்கு அழைத்து வந்து, நன்றாக இருக்கிறீர்களா? ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்டார். அந்த மாதிரி கம்பீரமான ஒரு ஆளு கடைசி நாட்களில் இப்படி பார்க்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். 71 பால், பல பவுண்டீரீஸ், பல சிக்ஸர்ஸ் நூற்றுக்கணக்கான மக்களை மகிழ்வித்து இந்த உறவுகளை விட்டு சென்று விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த் நாமம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement