கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவர் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமாகிய படம் என்றால் அது தூரத்து இடிமுழக்கம் படம் தான். கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றியடையாத காரணத்தினால் அடுத்த படத்தை எப்படியாவது வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற எண்ணம் விஜயகாந்திற்கு இருந்தது. அதே போல எஸ் ஏ சந்திரசேகருக்கும் அவள் ஒரு பச்சை குழந்தை என்ற முதல் படத்தின் தோல்விக்கு பின்னர் இது இரண்டாவது படம்.

Advertisement

சட்டம் ஒரு இருட்டறை :

இந்த படத்தின் மூன்று குற்றவாளிகள் சேர்ந்து ஒருவரை கொலை செய்கின்றனர். அப்படி கொலை செய்யும் போது கொலை செய்வதை கதாநாயகனின் அப்பா பார்த்து விடுகிறார். இதனை நீதிமாற்றத்தில் சாட்சி சொல்லவே இவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் இவர்கள் தண்டனை பெற்றதால் பழிவாங்கும் எண்ணத்தில் ஜெயிலில் இருந்து வந்து சாட்சி சொன்னவரை கொலை செய்து விடுகின்றனர் அதோடு அவரது மகளையும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுகின்றனர்.

மாறுபட்ட கதை :

இதனை குடும்பத்தினரின் கண் முன்னே செய்கின்றனர், இந்நிலையில் இதனை காவல் நிலையத்தில் சொல்ல கொலை செய்தவர்களாக சொல்லப்படும் நபர்கள் சிறையில் இருப்பதினால் வழக்கை வாங்க மறுத்து விடுகின்றனர். இந்தநிலையில் கதாநாயகன் பழிவாங்கும் எண்ணத்துடன் வளர்கிறான், இந்நிலையில் போலீஸ் அதிகாரியாகும் கதாநாயகனின் சகோதரி இவரை கொலை செய்ய விடாமல் தடுக்கிறார். இப்படி பட்ட சூழ்நிலையில் எப்படி கதாநாயகன் குற்றவாளிகளை கொலை செய்தார் என்பது கதை.

Advertisement

100 நாட்களுக்கு மேலே வெற்றி ;

இந்த படத்திற்கு விஜய்யின் அம்மா ஷோபா கதை எழுதியிருந்தார். மேலும் இப்படதிற்கு விஜயகாந்த் கதயநாயகனாகவும் பூர்ணிமா தேவி நாயகியாகவும், வாசுமதி போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். வழக்கமான கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பழிவாங்கும் கதையை கொண்ட இப்படம் 100 நாட்களுக்கு மேலே ஓடி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையும் தலைகீழாக மாற்றியது. அதற்கு பிறகு பல வெற்றிடங்களை இவர்கள் இருவரும் கொடுத்தனர்.

Advertisement

படத்தின் டைட்டில் :

தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த இப்படத்தின் டைட்டில் வந்தது எப்படியென்றால் 1949ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரி என்ற படத்தில் அண்ணா வசம் எழுகியிருப்பர். அந்த வசனத்தில் “சட்டம் ஒரு இருட்டறை” அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு, ஆனால் அது ஏழைகளுக்கு எட்டாத விளக்கு என்ற வசனத்தில் இருந்துதான் எஸ் ஏ சந்திரசேகர் இந்த விஜயகாந்த் படத்திற்கு “சட்டம் ஒரு இருட்டறை” என்ற பெயரை வைத்தார்.

ட்ரெண்ட் சென்டர் :

இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி மொழியில் அந்தா கானூன் என்று ரீமேக் செய்யப்பட்ட இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது, அதோடு தெலுங்கில் சிரஞ்செவியும், மலையாளத்தில் கமலும், கன்னடத்தில் சங்கர் நாத்தும் நடித்திருந்தனர். விஜயகாந்தின் “சட்டம் ஒரு இருட்டறை” படம் வெளியான பிறகு இந்த படத்தின் கதையா போன்றே பல படங்கள் வெளியானது எனவே இப்படத்தை ட்ரெண்ட் சென்டர் என சொல்லலாம்.

Advertisement