போஸ்டர் ஒட்ட தடை, பல்வேறு அச்சுறுத்தல் – பட தடைகளை தாண்டி வென்ற ‘அண்ணாமலை’ 31 ஆண்டுகள் நிறைவு

0
78
- Advertisement -

பல தடைகளைத் தாண்டி ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் வெற்றி கண்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அண்ணாமலை’.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதா ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை செய்திருந்தது. இந்த படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த குட்கார்ஸ் என்ற படத்தினுடைய ரீமேக். இந்த படமும் ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய ஸ்கேன் அண்ட் அபெல் என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.

- Advertisement -

அண்ணாமலை படம்:

அண்ணாமலை படம் என்று சொன்னவுடன் எல்லோருக்குமே நினைவில் வருவது ‘மலைடா அண்ணாமலை’ என்ற வசனம் தான். அந்தளவிற்கு இந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இருந்தாலும், இதை தமிழில் ஹீரோவுக்கான மேனரிஸம், ஆக்சன், இசை, மாஸ் மசாலா என்று உருவாக்கி இருந்தார்கள். படத்தில் நட்பு, துரோகம், பழிவாங்கல் என அனைத்தையும் காண்பித்தார்கள். ரஜினி, சரத் பாபு சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள்.

படம் குறித்த தகவல்:

ரஜினி பால் காரனாக இருக்கிறார், சரத்பாபு பணக்காரர். இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பை சரத் பாபுவின் தந்தையான ராதாரவிக்கு பிடிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்படுத்துகிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் மூலம்தான் தேவா முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்து இருந்தார். இவரின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் தான்.

-விளம்பரம்-

படம் வெளியீட்டு ப்ரச்சனை:

இந்த நிலையில் இந்த படம் வெளியான சமயத்தில் பல பிரச்சனைகள் நடந்திருந்தது. அண்ணாமலை படத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள். படத்தின் போஸ்டர்கள் கூட ஓட்ட கூடாது என பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. இதனால் படத்திற்கு போதிய அளவு விளம்பரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடி வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.

ரஜினி திரைப்பயணம்:

அந்த காலகட்டத்தில் தமிழில் அதிக வசூல் செய்த படத்தில் அண்ணாமலை ஒன்றாக மாறியது. அதற்கு பின் அண்ணாமலை படத்தை தெலுங்கு, கன்னட மொழியில் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள். இன்றோடு அண்ணாமலை படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். தற்போது ரஜினி அவர்கள் ஞானவேல் இயக்கும் ;வேட்டையன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்தும் ரஜினி அவர்கள் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement