பொண்ணு அம்மா மாதிரி, ஆனா பையன் அப்படியே அப்பா தான் – தன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய Sk.

0
670
sk
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் மகன் :

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனா பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

மகனுக்கு வைத்த பெயர் :

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், தனது மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்து இருந்தார். இதுகுறித்து புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயன். தனது மகனுக்கு அவரது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பொங்கல் ஸ்பெஷல் புகைப்படம் :

இந்த நிலையில் தான் இன்று பொங்கல் திருநாள் என்பதினால் சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மனைவி, மகள் மற்றும் அவரது மகன் உள்ளனர். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் சிவகார்த்திகேயன் மகன் குகன் தாஸிற்கு வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் சிவகார்திகேயனின் குடும்ப பொங்கல் ஸ்பெஷல் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் :

சிவகார்த்திகேயன் இறுதியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படம் வெற்றியடைந்த நிலையில் சமீபத்தில் “பிரின்ஸ்” திரைப்படம் வெளியானது. பல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் முதல் நாளிலேயே படும் தோல்வியை தழுவி Box Officeல் பெரிய அடி வாங்கியது. இந்த நிலையில் வரும் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அயலான், மாவீரன், AK24 என பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement