‘வரட்டும் வரட்டும், பிரயோஜனம் இல்ல’ – விஜயின் கட்சி குறித்து விமர்சித்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்

0
260
- Advertisement -

தளபதி விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் விமர்சித்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் தவெக குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சிக்கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடியிருந்தார். அந்தக் கட்சிக் கொடியில் நடுவில் வாகை மலரும், இருபக்கங்களில் யானை உருவமும் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு:

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி, வி. சாலையில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய். மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து இருந்ததை பார்த்த விஜய் எமோஷனலாகி கண்கலங்கி இருந்தார்.

மாநாடு குறித்த தகவல்:

அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜயின் பேச்சும் அனல் பறக்க இருந்தது. முதலில், மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதற்குப் பிறகு, கட்சிப் பாடல் ஒளிபரக்கப்பட்டது. பின், மேடைக்கு வந்த விஜய் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்பில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி உற்சாகத்துடன் நடந்து இருந்தார். பின், மாநாட்டில் விஜய் தன் கட்சியின் கொள்கைகளை குறித்து பேசி இருந்தார். அதோடு தனது ஸ்டைலில் பாண்டிய மன்னனின் குட்டி ஸ்டோரி குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் பேசி வருகின்றனர்.

-விளம்பரம்-

ரஜினிகாந்தின் அண்ணன்:

அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயண ராவ் ஜெய்க்வாட், தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘வரட்டும். வரட்டும். கமல்ஹாசன் மாதிரி அவங்களும் முயற்சி பண்ணட்டுமே. அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. அதனால் அவங்க பண்ணட்டும்.’

தமிழ்நாட்டுல முடியாது:

அவர் கட்சி ஆரம்பிச்சு பிரயோஜனம் இல்லை. அதனால், ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார். சரி முயற்சி பண்ணட்டும். அவர் மனதில் என்ன நினைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியாது. தமிழ்நாட்டுல முடியாது. விஜய்னால முடியாதுங்க. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்ன பண்றார்னு பார்க்கலாம். முயற்சிபண்ணட்டும். ஆனால், ஜெயிக்க முடியாது, கஷ்டம் என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பேச்சு, விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினரை கோபமடைய செய்துள்ளது.

Advertisement