தனது மருமகனுடன் ஸ்பெஷல் பொங்கலை கொண்டாடிய ரஜினி. புகைப்படம் இதோ.

0
33554
rajini
- Advertisement -

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமா துறை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய மகள் சௌந்தர்யா சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அவர்கள் தன் கணவர் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

-விளம்பரம்-

மேலும்,சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து இருந்தனர். பின்னர் இவர்கள் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனை திருமணம் செய்து கொண்டார். மேலும், தொழிலதிபர் விசாகனுக்கு, கனிகா என்ற பெண்ணுடன் ஏற்கனவேய திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வருடம் வருடம் பொங்கல் திருநாளை மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அதிலும் சினிமா பிரபலங்கள் பொங்கல் பண்டிகை அன்று எடுக்கப்படும் தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அவர்கள் தன்னுடைய தல பொங்கலை கொண்டாடி உள்ளார். பொங்கல் வைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் பொங்கல் வைத்து கொண்டாடி உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த பொங்கல் அவருக்கு தல பொங்கல் என்று சொல்லலாம். இந்த பொங்கலை தனது கணவர் குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement