ரஜினி முதல் அஜித் மேனேஜர் வரை – மோடியின் கோரிக்கையை ட்விட்டரில் நிறைவேற்றிய பிரபலங்கள்.

0
484
rajini
- Advertisement -

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. அனிரூத் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நெல்சன் அவர்கள் ஜெயிலர் பட வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

டெல்லி சென்ற ரஜினி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென டெல்லி சென்றிருந்தார். 75வது சுதந்திர தின விழா தொடர்பாக தான் ரஜினி டெல்லி சென்றது தெரிய வந்தது. பின்னர் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

75வது சுதந்திர தின விழா:

சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றிய பிரபலங்கள்:

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதிலும் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய ட்விட்டர் கணக்கில் உள்ள தனது முகப்பு பக்கத்தில் தேசியக்கொடி புகைப்படத்தை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் மோகன்ஜி, நிர்மலா சீதாராமன் உட்பட பல பிரபலங்கள் தங்களுடைய சோசியல் மீடியாவில் முகப்பு புகைப்படங்களை தேசியக் கொடியாக மாற்றி இருக்கிறார்கள்.

Advertisement