ரஜினி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர்மீது பல்வேறு விமர்சங்கள் குவிந்து வருகிறது. ராகினி எந்த ஒரு பொது பிரச்சனைக்கும் குரல் கொடுத்தது இல்லை, அவர் பொது பிரச்சனையில் இருந்து எப்போதும் விலகி இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

Advertisement

சில மாதங்களாகவே தமிழ் நாட்டில் விவசாயிகள் பிரச்னை, ஸ்டெர்லைட் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று (மே 22 ) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் வலுத்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் 9 பொது மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை போராட்டத்தின் 100 வது நாளான இன்று, மக்கள் அனைவரும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறைக்கும் போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது கலவரமாக மாறியது. இதனால் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடித்தினார். இதில் ஒரு 10 ஆம் வகுப்பு மாணவி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த துயரமான சம்பவத்தை பற்றி தனது கண்டனத்தை தெரிவித்துள்ள ரஜினி “இந்த வன்முறைக்கு தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம். அதனால் தற்போது பொது மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது மிகவும் வருந்ததக்கதும், கண்டிக்கத்தக்கதும் கூட. இந்த பொதுஜன இழப்பிற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement