25 ஆண்டுகளுக்கு முன் மேடையில் குஷ்பூவுடன் ஆடியுள்ள ரஜினி – கண்டிப்பா இது கேப்டன் ஏற்பாடா தான் இருக்கும்.

0
505
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் வகையில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அண்ணாத்தா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது. அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

ரஜினிகாந்தின் அண்ணத்தா படம்:


மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த இயக்குனர் படத்தில் நடிக்கிறார்? என்று சோஷியல் மீடியாவில் பல கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா- தனுஷ் விவாகரத்து விவகாரம் குறித்து மனவேதனையில் இருக்கிறார்.

ரஜினிகாந்தின் அடுத்த படம் :


இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகு தான் அவர் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் உடைய நடனம், மாஸ் வசனங்கள் எல்லாத்தையும் நாம் படத்தில் பார்த்திருப்போம். செம்ம ஸ்டைலா, வேற லெவல் இருக்கும். இவருடைய மாஸ் வசனம், ஸ்டைலுக்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால், இவர் பொது நிகழ்ச்சி மேடையில் நடனம் ஆடி, மாஸ் வசனங்கள் பேசி இருப்பதை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டோம்

-விளம்பரம்-

ரஜினிகாந்தின் பழைய வீடியோ:

இந்நிலையில் தற்போது இந்த மாதிரியான ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பொதுவாகவே ரஜினிகாந்தின் வீடியோ ஏதாவது ஒன்று வந்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள். அதிலும் சமீபகாலமாக தலைவர் குறித்த பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மேடையில் நடனமாடி, வசனங்கள் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் ரஜினிகாந்த் கலந்து இருந்தார்.

வைரலாகும் ரஜினிகாந்தின் பழைய வீடியோ:

இந்த நிகழ்வில் ரஜினிகாந்துடன் நடிகை குஷ்பு, லதா ரஜினிகாந்த் உட்பட பலரும் கலந்து இருந்தார்கள். அப்போது ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பாட்ஷா கெட்டப் போட்டு மாசான வசனங்களை பேசி நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்துடன் குஷ்புவும் இணைந்து மேடையில் நடனம் ஆடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவை அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் தான் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

Advertisement