யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ரஜினி – கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
2640
Rajini
- Advertisement -

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் வசூல்:

அதுமட்டுமில்லாமல் சுதந்திர தினத்தன்று மட்டும் ஜெயிலர் படம் நாடு முழுவதும் 35 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜெயலலிர் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகம் முழுவதும் 375 கோடி அதிகமான தொகையை வசூலித்து இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் உடன் ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்க்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

உத்திரபிரதேசம் முதலமைச்சர் உடன் ரஜினி:

அதாவது, ஜெயலலிர் படம் வெளிவந்த பிறகு ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆசிரமத்திற்கு சென்று இருக்கிறார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருக்கிறார்.

ரஜினி யோகி சந்திப்பு :

அப்போது ரஜினிகாந்தை பார்த்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்து இருக்கிறார்கள். அதில் ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார். ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை.. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி.

காலில் விழுந்த ரஜினி :

இந்நிலையில், தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை ப்ளூ சட்டை கூட தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து ஒரு சிலர் ரஜினிக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் ரஜினியை விமர்சித்தும் பதிவுகளை போட்டு வருகின்றனர். ஒரு சிலர் யோகி ஒரு ஆன்மீக வாதி அதனால் தான் ரஜினி அவரது காலில் விழுந்தார் அதில் என்ன தவறு என்று கூறி வருகின்றனர். மேலும், சிலரோ ரஜினிக்கு வயது 72, யோகிக்கு வயது 51 தான். இப்படி வயதில் சிறியவர் காலில் விழலாமா என்று விமர்சித்து வருகின்றனர்.

அஅதே போல ரஜினி நடித்த காலா படத்தின் ஒரு காட்சியில் சிறுமி ஒருவர் ரஜினி காலில் விழ வரும் போது வேண்டாம் பேட்டி வணக்கம் சொல்லு போதும் என்று ரஜினி கூறும் காட்சிகளை எல்லாம் பகிர்ந்து படத்தில் இப்படி நிஜத்தில் இப்படி என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். அதே போல தாய் தந்தையர் காலை தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என்று ரஜினி பேசிய வீடியோவை எல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement