தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். அன்றும் இன்றும் இவருடைய படங்கள் என்றாலே திரையரங்குகளில் திருவிழா போன்ற கூட்டம் அலைமோதும். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமா உலகில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தனது இரண்டாவது மகளான சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டு முதன் முதலாக ஆடியோ பேசி வெளியிட்டிருந்தார்.
அதற்கான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகியது. இப்படி தலைவர் பற்றி எந்த தகவல் என்றாலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் தன் பேரன்களுடன் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்த புகைப்படங்களும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதில் தனுஷ்– ஐஸ்வர்யாவின் முதல் மகனான யாத்ரா இருந்தார். அதில் யாத்ரா தனது கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இதனை ரசிகர்கள் ரஜினியின் இதே மாதிரி இருக்கும் பழைய புகைப்படத்தையும் தனுஷ் மகனின் புகைப்படத்தையும் இணைத்து அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் கைய பின்னாடி நிக்கிற ஸ்டைலே வேற என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள். தற்போது இந்த டீவ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.