ப்பா, காலா பட நடிகையா இது ? இளம் வயதில் படு கிளாமர் உடையில் கொடுத்துள்ள போஸை பாருங்க.

0
2888
eswari
- Advertisement -

இயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் இந்தி நடிகர் நானா படேகர் சமுத்திரகனி,வத்திக்குச்சி பட நாயகன் திலீபன், பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால், சாயாஜி சிண்டே, ஹுமா குரோஷி என்று பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவரை காலா படத்திற்கு முன்பாகவே பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is eeswari-rao%2B%25282%2529.jpg

நடிகை ஈஸ்வரி ராவ் தமிழில், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கவிதை பாடும் அலைகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழகிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவ்வளவு ஏன் நாளைய தீர்ப்பு படத்தில் இரண்டாம் ஹீரோயினாக கூட நடித்திருந்தார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் தனுஷின் அக்காவாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அப்போ இந்த காதலும் விபூதியா – திருமணம் குறித்து கேட்ட ரசிகருக்கு லைவில் ஸ்ருதி சொன்ன ஷாக்கிங் பதில்.

- Advertisement -

ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தனுஷுக்கு அக்காவாக நடித்து பின்னர் ரஜினிக்கே மனைவியாக நடித்தவர் இவர் மட்டுமாக தான் இருக்கும். இந்த நிலையில் நடிகை ஈஸ்வரி ராவ், இளம் நடிகையாக இருந்த போது அட்டை படத்திற்கு படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is eeswari-rao%2B%25281%2529.jpg

நடிகை ஈஸ்வரி ராவ் இறுதியாக தமிழில் லாக்கப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நித்தின் சத்யா தயாரித்துள்ள இந்த படத்தில் வைபவ் மற்றும் வாணிபோஜன் நடித்திருக்கிறார்கள். மேலும், வெங்கட்பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஜீ Ott தளத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஈஸ்வரி ராவ் காக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்

-விளம்பரம்-
Advertisement